இராணுவம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி தெரிவிப்பு!

Monday, July 20th, 2020

இராணுவத்தினர் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என யாழ் மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில் – இராணுவத்தினர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனரா இல்லையா என்பது தொடர்பில் பொது மக்களிடம் வினவுமாறும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் இலங்கை  இராணுவ தளபதி யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதிக்கு விஜயத்தினை மேற்கொண்டு அங்கு இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை வீட்டு உரிமையாளர்களிடம் கையளித்திருந்தார்.

இது தொடர்பில் சில அரசியல்வாதிகள்  இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.  இராணுவத்தினர் ஆகிய எமக்கு பொதுமக்களுக்கான மனிதாபிமான செயற்பாடுகளை செயற்படுமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது

அதன்படி நாங்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு வீடற்றவர்களுக்கு வீடுகளை வழங்குவதோடு வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வருகின்றோம் அத்தோடு பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்துள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: