கடும் வறட்சி – நீர் வற்றும் ஆறுகள்!

Wednesday, March 27th, 2019

கடந்த சில மாதங்களாக மத்திய மலைநாட்டில் கடும் வறட்சி நிலவி வருவதால் நீரோடைகள் மற்றும் நீர் ஊற்றுக்கள் அனைத்தும் வற்றிப்போய் உள்ளன.

மவுசாகலை, காசல்ரீ, கென்யன், லக்சபான, நவலக்சபான, பொல்பிட்டிய மற்றும் மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் பாரியளவில் குறைவடைந்துள்ளது.

கடும் வறட்சி நிலவுவதால் மேலும் நீர் மட்டம் குறைய வாய்ப்புள்ளதுடன் மேலும் வறட்சியான காலநிலை தொடர வாய்ப்புக்கள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts: