சீனி அதிகமாக உள்ள பானங்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

Thursday, July 11th, 2019

சீனி அதிகமுள்ள குடிபானங்களை பருகுகின்றவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக புதிய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.

சீனி அதிகம் கலந்த பானங்கள் நேரடியாக புற்று நோயை ஏற்படுத்தும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை.

ஆனால் அவ்வாறான பானங்களை அதிகம் பருகுகின்றவர்களுக்கான புற்றுநோய் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி சீனி கலந்த பானங்கள் மற்றும் சிற்றுண்டிகளை குறைக்கின்ற பட்சத்தில், புற்றுநோயை குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தசாப்தங்களில் உலக அளவில் சீனி கலந்த உணவுப் பொருட்களின் நுகர்வு வேகமாக அதிகரித்து வருகிறது.

இதனால் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: