புதிய இந்திய குடியரசுத் தலைவருக்கு இலங்கைத் தலைவர்கள் வாழ்த்து!
Tuesday, July 25th, 2017
இந்தியாவின் 14 ஆவது குடியரசுத் தலைவராக பதவியேற்கவுள்ள ராம்நாத் கோவிந்துக்கு இலங்கையின் அரச தலைவர்களான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவியேற்கவுள்ள ராம்நாத் கோவிந்துக்கு தமது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமது அதிகாரபூர்வ ருவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதேவேளை தொலைநோக்கு கொண்ட தலைமைத்துவத்தின் கீழ் இந்தியாவின் அபிவிருத்தி மற்றும் சுபீட்சத்திற்கான பாதைக்கு வழிவகுக்கும் ஒளிவிளக்காக அமையும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Related posts:
மரக்கறிகளின் விலைகள் அதிகரிப்பு!
உலகளாவிய தடுப்பூசி விகிதத்தில் இலங்கை 3 ஆவது இடத்தில் - சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!
பெரும்போக விவசாயத்தின் சோள பயிர்ச் செய்கைக்கு தேவையான முதற்கட்ட யூரியா உரம் விநியோகம் - விவசாய அமைச...
|
|
|


