உலகளாவிய தடுப்பூசி விகிதத்தில் இலங்கை 3 ஆவது இடத்தில் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!
Thursday, January 13th, 2022
உலகளாவிய தடுப்பூசி விகிதத்தில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளதாக சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
194 நாடுகளை உள்ளடக்கியதாக இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டில் ஒரு நாடு என்ற வகையில் மக்களுக்குக் கிடைத்த மிக உயர்ந்த சாதனை இது என அமைச்சர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி மூலம் மக்களின் உயிரைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். நாட்டுக்கு மருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பில் பல நடவடிக்கைகள் கலந்துரையாடப்பட்டு வருவதாக வும், சில பிரச்சினை களை இனங்கண்டு தேவையான தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எளிமைப்படுத்தப்பட்ட நடைமுறையுடன் மணல் மற்றும் சரளைகள் கொண்டு செல்வோருக்கு அனுமதி - புவிச் சரிதவியல் ...
வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு 18 ஆம் திகதி நள்ளிரவுமுதல் தடை - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அற...
நாளைமுதல் முதியோருக்கான ஜூலை மாதத்துக்கான நிவாரண கொடுப்பனவு - நலன்புரி நன்மைகள் சபை !
|
|
|


