புதிய ஆண்டில் புகையிரத திணைக்களம் போன்றவை போராட்டங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!

Friday, December 31st, 2021

அடுத்த ஆண்டில் புகையிரத திணைக்களம் போன்றவை போராட்டங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதற்கு ஜனாதிபதி 2022 இல் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார் என்றும் யார் எதிர்த்தாலும் அவர் அதனை எடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

புகையிரத திணைக்களத்தின் பணிப்பகிஸ்கரிப்பின் காரணமாக ஏற்பட்ட இழப்பினை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்களிடமிருந்து பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன இதன் உண்மை நிலை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போது மேலும் அவர் தெரிவிக்கையில் –

இல்லை அது நடைபெறாது,பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்களிடமிருந்து எப்படி இழப்புகளை பெற முடியும், தங்கள் திணைக்களத்தை இந்த நிலைக்கு கொண்டுவந்தால் என்ன நடக்கும் என்பதை பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அவர்களுடைய போராட்டத்திற்கு நியாயமான சில காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடுவதற்கு முன்னர் அறிவித்திருக்கவேண்டும்.

ஆனால் அவ்வாறான திணைக்களங்கள் தொடர்ந்தும் பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டால் நாங்கள் இந்த வருடம். கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம்.

நாங்கள் தொடர்ந்தும் அவர்களை அரசாங்கத்தின் கரங்களில் வைத்திருப்பதா அல்லது வேறு எவரிடமாவது வழங்குவதா என தீர்மானிக்கவேண்டிய ஏற்படும்.

இது குறி;த்து நாங்கள் தெளிவாக இருக்கவேண்டும். நட்டத்தில் இயங்கும் ஸ்தாபனங்கள் குறித்து தீர்க்கமான கடுமையான முடிவை எடுக்க நாங்கள் தீர்மானித்துள்ளோம்.

அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம் நாங்கள் அவர்களின் சேவைகளை நிறுத்திவிட்டு கடுமையான முடிவுகளை எடுப்போம்.

அந்த முடிவுகளை நாங்கள் மீண்டும் மாற்றமாட்டோம், நாங்கள் தவறிழைத்துள்ளோம், கடந்த காலங்களில் எங்களின் பல முடிவுகள் போராட்டங்கள் வேலைநிறுத்தங்களால் கைவிடப்பட்டன இதனால் அரசாங்கம் பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

கிழக்கு கொள்கலன் முனையத்தை பற்றி கதைத்தால் தற்போது அந்த தீர்மானம் கைவிடப்பட்டுள்ளது, தற்போது என்ன நடக்கின்றது – இதனை கட்டுவதற்கு பணம் இல்லை – எந்த முதலீட்டாளர்களும் முன்வருகின்றார்கள் இல்லை.

போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் ஆனால் நாட்டிடம் பணம் இல்லை ,ஆனால் அதனை அபிவிருத்தி செய்ய முடியவில்லை இதுதான் தற்போதைய நிலை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: