தேர்தல் பணிகளுக்கு எரிபொருள் நிவாரணம் இல்லை – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!

Thursday, February 23rd, 2023

தேர்தல் தொடர்பான பணிகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான பணிகளுக்காக, மொத்தமாக தலா 30 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை கொண்ட இரண்டு கப்பல்கள் தேவைப்படலாம். இந்த நோக்கத்திற்காக திறைசேரி சுமார் 100 முதல் 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க வேண்டும்.

எனவே, இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களால் கிவ் ஆர் ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ அல்லது வேறு எந்த எரிபொருள் உதவியையும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்கவோ முடியாது என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் வாகனங்களுக்கான கிவ் ஆர் ஒதுக்கீட்டை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரிக்க வேண்டுமானால், அத்தியாவசிய சேவைகள், விவசாயம் மற்றும் மீன்பிடித் துறைகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் தொகையை குறைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தேர்தல் தொடர்பான பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை அணுகிய போதிலும், அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், போதிய எரிபொருள் விநியோகம் இன்மை உள்ளிட்ட பல காரணங்களைக் காட்டி எதிர்வரும் மார்ச் 9ஆம் திகதி உள்ளுராட்சித் தேர்தலை நடத்த இயலாது என்று தேர்தல் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் தெரிவித்தது.

முன்னதாக, நேற்றுமுதல் நடைபெறவிருந்த அஞ்சல்மூல வாக்களிப்பும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: