அணித்தலைவர்களாக சந்திமால், தரங்க!
Wednesday, July 12th, 2017
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர்களாக, டினேஷ் சந்திமால், உபுல் தரங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் தலைவராக இருந்த அஞ்சலோ மத்தியூஸ், தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்தே, புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டெஸ்ட், ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி என, 3 வகையான போட்டிகளினதும் தலைவராக, மத்தியூஸ் விளங்கிய போதிலும், தற்போது 2 பேருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, டெஸ்ட் அணியின் தலைவராக டினேஷ் சந்திமால் செயற்படவுள்ள அதேநேரத்தில், ஒருநாள் சர்வதேசப் போட்டி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியவற்றின் தலைவராக, உபுல் தரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
Related posts:
அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி ஜனாதிபதி!
இலங்கை ஊடாக பயங்கரவாத தாக்குதல் சாத்தியம் - பயங்கரவாத எதிர்ப்புப் படைகோரி சென்னை உயர் நீதிமன்றில் பொ...
சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் வங்கி கணக்குகளில் பாரிய மோசடி – பொதுமக்களுக்கு புலனாய்வு திணைக்களத்தின் ...
|
|
|


