சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் வங்கி கணக்குகளில் பாரிய மோசடி – பொதுமக்களுக்கு புலனாய்வு திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வு பிரிவு எச்சரிக்கை!

Saturday, November 19th, 2022

முகநூல் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலமாக பணம் திருடும் திட்டமிட்ட மோசடி இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனி குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடியில் ஈடுபட்ட மூவர் (16) கண்டியில் கணனி குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, தலாத்துஓயா மற்றும் மதவாச்சிப் பிரதேசங்களில் வசிக்கும் இவர்கள்,25 மற்றும் 30 வயதுடையவர்களென குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவிக்கின்றது.

முகநூல் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் விளம்பரங்களைப் பார்த்து, அந்த விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு அழைப்பது தான் இவர்களின் வேலையாகும். அவர்கள் இதற்காக தங்கள் பெயரிலுள்ள சிம் அட்டைகளை பயன்படுத்துவதில்லை.

இவர்கள் முதலில் அந்த விளம்பரங்களில் உள்ள பொருட்களை யாருக்கும் விற்க வேண்டாம் நாங்களே வாங்குவதாகக் கூறுவர். ” எனக்கு கொஞ்சம் பணம் போதாது ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த எனக்கு ஒரு வாரம் அவகாசம் கொடுங்கள்” என்றும் இவர்கள் கூறுவர். விளம்பரதாரர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவே இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: