புதிய ஆண்டில் இலங்கை விரிவடையும் பொருளாதாரத்திற்குள் நுழையும் – மக்கள் தேவையற்ற வரிச்சுமையை கண்டு பயப்பட தேவையில்லை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Monday, December 4th, 2023
2024 ஆம் ஆண்டில் இலங்கை விரிவடையும் பொருளாதாரத்திற்குள் நுழையும் எனவும் மக்கள் தேவையற்ற வரிச்சுமையை கண்டு பயப்பட வேண்டாம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டு இலங்கை VAT வரி 24 விகிதமாக அதிகரிக்கும் என சில தரப்பினர் முன்வைத்துள்ள கணிப்புகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..
மேலும் இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர் –
2024 ஆம் ஆண்டளவில் விரிவடையும் பொருளாதாரத்திற்குள் இலங்கை பிரவேசிக்கும் எனவும், புதிய வரிச்சுமைக்கு மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் பொருளாதார நிலைமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பாதகமான கோணத்தில் முன்னோட்டங்களை உருவாக்கி வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், பொருளாதாரத்தை முற்றிலும் எதிர்மறையாகவோ அல்லது நேர்மறையாகவோ பார்க்காமல் நடுநிலையாக பார்க்க வேண்டும் என அமைச்சர் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
|
|
|


