20ஆவது திருத்தச் சட்டத்தில் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் எந்த கட்சியும் தமது திருத்தங்களை முன்வைக்க முடியும் – பிரதமர் தெரிவிப்பு!

Sunday, September 20th, 2020

உத்தேச 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு திருத்தங்களை முன்வைப்பது தொடர்பாக தான் நியமித்த குழுவின் பரிந்துரைகள், நாடாளுமன்ற குழு நிலை விவாதத்தின் போது முன்வைக்கப்படும் என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதனால், இந்த 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் முன்னர், குழு நிலை விவாதத்தின் போது, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எந்த கட்சியும் தமது திருத்தங்களை முன்வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது முன்வைக்கப்பட்ட வரைபு  புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் முன்னர் சமர்ப்பிக்கப்படும் இடைக்கால திருத்தச் சட்டம் எனவும், எதிர்காலத்தில் விரிவாக கலந்துரையாடி தேவையான திருத்தங்களுடன் புதிய அரசியலமைப்புச் சட்டம் கட்டாயம் கொண்டு வரப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை மதித்து, மக்களின் நிலைப்பாடுகளுக்கு செவிகொடுத்து, சரியான முறையில் செயற்பட வேண்டும் என்பது தமது அரசாங்கத்தின் கொள்கை எனவும், குறைபாடுகள் இருப்பின் சுட்டிக்காட்டுவதற்கு நாட்டு மக்களுக்கு கூடிய சந்தர்ப்பம் இருப்பதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: