புகை பரிசோதனை சான்றிதழ் வழங்கும் உரிமையை இ.போ.ச.வுக்கு வழங்குமாறு கோரிக்கை!

அனைத்து வாகனங்களுக்கும் வாகன வருமான உத்தரவுப் பத்திரம் பெறுவதற்கு முன்னோடியாக நடத்தப்படும் புகை பரிசோதனை சான்றிதழ் வழங்கும் உத்தியோகபூர்வ உரிமையை இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்குமாறு அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் செயலாளர் சேபால லியனகே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
2008 மற்றும் 2016 ஆம் ஆண்டு காலப் பகுதியில் குறிப்பிட்ட இரு சங்கங்களுக்கு மாத்திரமே இந்த சான்றிதழ் வழங்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த நிறுவனங்கள் 860 கோடி ரூபா லாபம் உழைத்துள்ளதாகவும், இந்த நிதியில் அரசுக்கு வெறும் 89 கோடி ரூபா மாத்திரமே கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் சேபால லியனகே சுட்டிக்காட்டியுள்ளார். இதனால், இ.போ.ச. வுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வெளி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதை நிறுத்தி விடுமாறும் குறித்த சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|