புகையிலை உற்பத்தியை தடை யாழ். விவசாயிகள் மீது மேற்கொள்ளப்படும் சதி! ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் விவசாயி ஆதங்கம்!
Friday, March 16th, 2018
புகையிலையினைத் தடை செய்வது என்பது யாழ்ப்பாணத்தவர்கள் மீது மேற்கொள்ளப்படும் சதித்திட்டமாகவே நாம் கருதுகின்றோம். புகையிலை செய்து எங்களை வாழவிடுங்கள். உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமலே இருங்கள் என பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் விவசாயி ஒருவரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் புகையிலை தொடர்பில் ஆராயப்பட்ட போது விவசாயி ஒருவர் இவ்வா தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
எந்த மண்ணுக்கு எந்த தண்ணிக்கு எந்த பயிர் என்ற அடிப்படையில் நாம் பயிர் செய்கிறோம். எமது பணப்பயிர் புகையிலை. அதனைச் செய்து எம்மை வாழவிடுங்கள் எனக் கூறினார்.
Related posts:
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்!
பாடசாலைகளை மூடிவைத்திருப்பது மாணவர்களின் வாழ்க்கையை இருளாக்குவதாக அமையும் - கல்வி அமைச்சர் பேராசிரி...
நீதிமன்ற அவமதிப்பு - தேசிய கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு 6 ஆண்டுகள் கடூழியச் சிறை!
|
|
|


