புகையிரத திணைக்களத்துக்கு நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் – புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தகவல்!
Saturday, December 25th, 2021
புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, புகையிரத திணைக்களத்துக்கு நாளாந்தம் சுமார் 10 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையால், பயணச்சீட்டு விநியோகம் மற்றும் பொதிகளைப் பொறுப்பேற்றல் என்பன இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
பதவி உயர்வு, பயணிகளுக்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தித் புகையிரத நிலைய அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம், நாளை (26) நள்ளிரவுமுதல், அனைத்து சேவைகளில் இருந்தும் விலகி, தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாகவும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சமூகத் தொற்றாக மாறுகின்றதா கொரோனா - அச்சத்தில் தென்னிலங்கை மக்கள்!
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைதாவோர் அதிகரிப்பு - சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்...
முன்கூட்டியே திட்டமிட்டு செயற்படுங்கள் - சேவைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்களிடம் இலங்கையிலுள்ள...
|
|
|


