புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படாது – ரயில்வே பொது முகாமையாளர்!

ரயில் பயணக் கட்டண அதிகரிப்பு பற்றிய வதந்திகளை ரயில்வே பொது முகாமையாளர் டீ. டப்ளியு. பி. ஆரியரட்ன நிராகரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் – ரயில் வண்டிகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. நாளொன்றில் குறைந்தபட்சம் நான்கு இலட்சம் பேர் ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள். இதற்கு குறைந்த கட்டணமும் ஒரு காரணம்.விரைவில் இந்தியாவிலிருந்து பவர் செட்டுக்களை தருவித்து மழைநாட்டு பாதையின் சேவையில் ஈடுபடுத்தப்படும்.
பல வருடங்களாக கட்டணம் அதிகரிக்கப்படவில்லை. ரயில் பார்சல்களுக்கான கட்டணத்தை திருத்துவது பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது ரயில்வே பொது முகாமையாளர் டீ. டப்ளியு. பி ஆரியரட்ன மேலும் தொவித்தார்.
Related posts:
தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு நிவாரணம் - அமைச்சர் காமினி லொகுகே தெரிவிப்பு!
முதல் 10 மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை 5 இலட்சத்து 70 ஆயிரத்தை அண்மித்துள்ளது - சுற்றுலா அபிவிரு...
15 இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் - துருக்கிக்கு உதவியளிக்க 300 படையினருடான குழாம் இலங்கையில் தய...
|
|