15 இலங்கையர்களும் பாதுகாப்பாக உள்ளனர் – துருக்கிக்கு உதவியளிக்க 300 படையினருடான குழாம் இலங்கையில் தயார் நிலையில் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2023

துருக்கியினால் கோரிக்கை விடுக்கப்பட்டால், உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதற்காக இராணுவத்தினர், மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் உட்பட 300 பேர் கொண்ட இராணுவக் குழுவொன்றை களமிறக்க இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியா பகுதிகளில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பாரிய நில அதிர்வு அனர்த்தங்களால், இதுவரையில் 3500க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதுடன், 1000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை, துருக்கியில் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை அண்டிய பகுதியில் இருந்த 15 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துருக்கியில் உள்ள தமது உறவினர்கள் தொடர்பான தகவல்களை அறியவும், அவர்கள் தொடர்பான தகவல்களை அறிய விசேட இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தகவல் பெற வேண்டியவர்கள் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தினால் வழங்கப்பட்டுள்ள 009 03 124 271 032, 009 05 344 569 498 ஆகிய இரண்டு அவசர எண்கள் ஊடாக தொடர்புகொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:

யாழ் . குடாநாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழில் சந்தை நிகழ்...
மக்களின் தேவைகளை அறிந்து செயல் வடிவம் கொடுப்பவர் டக்ளஸ் தேவானந்தா - பிரபல சட்டத்தரணி றெமிடீயஸ்  !
70 மில்லியன் ரூபாய் முறைக்கேடு - நாமல் ராஜபக்சவை செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு...