பிற்பொக்கெட் அடித்த பெண் சில நிமிடங்களில் கைது!
Tuesday, April 12th, 2016
யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நின்றிருந்த பெண்ணின் கைப்பைக்குள் இருந்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தைத் திருடிய சந்தேகநபரான குருநகர் பகுதியைச் சேர்ந்த பெண்ணை திருடிய 15 நிமிடங்களில் பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது..
நேற்று (11) மாலை புதுவருட கொள்வனவை முடித்துவிட்டு நண்பிக்காக மேற்படி பெண் காத்திருந்த வேளை, பெண்ணின் பின்பக்கமாகச் சென்ற சந்தேகநபரான பெண், கைப்பையைத் திறந்து பணத்தை திருடியுள்ளார். திருடிய பின்னர், சந்தேகநபரான பெண் தடுமாற்றமடைந்த போது, அங்கு சிவில் உடையில் கடமையில் இருந்த பொலிஸார், சந்தேகநபரான பெண்ணை விசாரணை செய்த போது, பணம் திருடப்பட்டமை தெரியவந்தது.
உடனடியாக அவரைக் கைது செய்த பொலிஸார் பணத்தையும் மீட்டனர். மேற்படி பெண்ணின் கணவர் திருட்டுக் குற்றச்சாட்டில் கைதாகி விளக்கமறியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைக்கவே சுமந்திரன் விரும்புகிறார் - முன்னாள் அம...
தகவல் தொழில்நுட்ப பட்டப்படிப்பிற்கு 10 ஆயிரம் மாணவர்களை இணைத்துக்கொள்ள தீர்மானம் – பல்கலைக்கழக மானிய...
ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட உயர்வு - அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைகிறது!
|
|
|


