முதலைகளின் நடமாட்டத்தால் அம்பாறைபாண்டிருப்புமக்கள் அச்சத்துடன் வாழ்ந்துவருகின்றனர்.

Monday, June 5th, 2017

அம்பாறை பாண்டிருப்பு பெரிய குளத்தில் முதலைகளின் நடமாட்டம் முன்னரைவிட தற்போது அதிகரித்துள்ளதாகவும், இதனால் நாளாந்தம் தாம் அச்சத்துடனேயே வாழ்வதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக இரவுநேரங்களிலும்,விடியற்காலைகளிலும்; குறித்தகுளத்தின் கரைகளில் முதலைகள் வந்துதங்குவதனால் அவ்வீதியால்; மக்கள் மகு;தஅச்சத்துடனேயேபயணித்துவருவதாகவும் தெரியவருகின்றது.

அத்துடன் இக்குளத்தில் நன்னீர் மீன்படித் தொழிலில் ஈடுபடுவோர் முதலைகளுக்கு அஞ்சி குறித்ததொழிலில் ஈடுபடாமல் இருப்பதனால் அவர்களதுகுடும்பங்கள் பொருளாதாரத்தில் பாரியநெருக்கடிகளைஎதிர்கொளவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையேவிவசாயிகளும் முதலைகளுக்கு அஞ்சி விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அச்சம்  தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் குறித்த குளத்திலிருந்து முதலைகளை அப்புறப்படுத்தி தமது குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாத்துபலப்படுத்துவதற்குதுறைசார்ந்தவர்கள் நடவடிக்கைஎடுக்கவேண்டுமெனநன்னீர் மீனபிடித்தொழிலாளர்களும்,விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் பாண்டிருப்புபெரியகுளத்தினைபுனரமைத்துத் தருமாறும் மேட்டுவட்டைவிவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: