பிரான்ஸ் – இலங்கைக்கிடையிலான பாதுகாப்பை பலப்படுத்த பேச்சு!
Tuesday, November 29th, 2016
இந்து சமுத்திர பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரான்ஸ் கடற்படையின் கூட்டு கட்டளையிடும் அதிகாரி ரியர் எட்மிரல் டிடியர் பெலட்டோனுக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ரூவன் விஜேவர்தனவுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிவான இரு தரப்பு தொடர்பு மற்றும் பாதுகாப்பு புரிந்துணர்வை வலுப்படுத்துவது தொடர்பிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. சமுத்திர பாதுகாப்பு தொடர்பான காலி கலந்துரையாடல் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டிடியர் பெலட்டோன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார் என்பது குறிப்pபிடத்தக்கது.

Related posts:
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலினால் 56 பேர் உயிரிழப்பு!
மலேரியா நோயை பரப்பும் நுளம்புகள் வட மாகாணத்தில்!
மக்கள் நலத் திட்டங்களை சாத்தியமாக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளைப் போலவே அரசாங்க அதிகாரிகளையும் சார்ந்...
|
|
|


