பிரதம நீதியரசர் பதவிக்கான பரிந்துரைகள் தவிர, உயர்நீதிமன்றத்தின் ஏனைய பதவிகளுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!
Wednesday, May 1st, 2024
பிரதம நீதியரசர் பதவிக்கான பரிந்துரைகள் தவிர, உயர்நீதிமன்றத்தின் ஏனைய நீதியரசர் பதவிகளுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு, ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்பு பேரவைக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை, உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்க ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அரசியலமைப்பு பேரவை நிராகரித்துள்ளது.
இந்த தீர்மானத்துக்கு எதிராக சட்டத்தரணி ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை பரிசீலிப்பதற்கு தீர்மானித்த உயர்நீதிமன்றம், இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மழையால் சிறுதானியங்கள் அழிவு: விவசாயிகள் கவலை!
வலிகாமம் மேற்கு பிரதேசத்தில் செப்பனிடப்படாதிருந்த வீதிகள் பல புனரமைப்பு!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை - பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிப்பு!
|
|
|


