பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் இத்தாலி வியஜம் – தற்போதைய நிலைமைகள் குறித்தும் பரிசுத்த பாப்பரசரிடம் தெளிவுபடுத்தப்படும் என அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவிப்பு!

Wednesday, September 8th, 2021

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் ஆகியோர் இத்தாலிக்கு விஜயம் செய்யவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர்  ஆகியோரின் பயணம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுகமகே, அரசாங்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் இந்த மகாநாட்டில் கலந்துகொண்டனர்.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பாக புனித பரிசுத்த பாப்பரசரிடம், பிரதமரும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரும் தெளிவுபடுத்த இருப்பதாக கூறப்படுவதாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், இருதரப்பினருக்கு இடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதற்காகவே இந்த விஜயம் இடம்பெறுகிறது.

இந்த விஜயத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான தேவையான விடயங்கள் அதன் தற்போதைய நிலைமைகள் குறித்தும் பரிசுத்த பாப்பரசரிடம் அவசியம் தெளிவுபடுத்துவார்கள் என்று அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: