பிரதமர் தலைமையில் பாடசாலை மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ விசேட காப்புறுதி திட்டம்!

மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்தும் தேசிய வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
அலரிமாளிகையில் நேற்று நடைபெறவுள்ள அறிமுக நிகழ்வு ,பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு கருதி இந்த விசேட காப்புறுதி திட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா முதல் ஐந்து லட்சம் ரூபா வரையிலான பெறுமதி கொண்ட நன்மைகளை பெறக்கூடிய வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாடாளவிய ரீதியில் உள்ள 11 இலட்சத்து 242 பாடசாலைகளில் கல்வி கற்கும் 45 இலட்சம் மாணவர்களுக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கக்கூடிய காப்புறுதி திட்டமாக இது அமைந்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் பூரண அனுசரணையுடன், இந்த காப்புறுதி திட்டத்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும் விசேட காப்புறுதி அட்டை ஒன்று வழங்கப்படும். நோய்களுக்கு சிகிச்சை பெறும் பொழுது தனியார் வைத்தியசாலைகளில் ஏற்படும் செலவினங்களில் 20 வீதத்தை இந்த காப்புறுதி திட்டத்தின் ஊடாக பெற்றுக் கொள்ளலாம்.
அரச வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் காலப்பகுதியில், ஒரு தினத்திற்கு ஆயிரம் ரூபா வீதம் 30 நாட்கள் வரை உள்ள காலப்பகுதிக்கான கொடுப்பனவை பெற்றுக் கொள்ள முடியும். இந்த திட்டத்திற்காக அரசாங்கம் 2700 மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருப்பதாக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்
Related posts:
|
|