சீன தடுப்பூசி போடப்பட்ட எவருக்கும் இதுவரை எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை – இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Wednesday, May 12th, 2021

சீனாவில் தயாரிக்கப்பட்ட சைனோபார்ம் கொவிட் தடுப்பூசி போடப்பட்ட எவரிடம் இருந்தும் இதுவரை எந்தவொரு பக்க விளைவுகளும் பதிவாகவில்லை என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இதுவரை 71 ஆயிரத்து 203 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொவிட் 19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் நேற்றையதினம் 65 ஆயிரத்து 803 பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

50,493 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசியும், 5,460 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியும் மற்றும் கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் 9,850 பேருக்கும் போடப்பட்டதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை பத்து இலட்சத்து 7 ஆயிரத்து 783 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதேபோல், 2 ஆயிரத்து 435 சீனர்களுக்கு மற்றும் 2 இலட்சத்து 21 ஆயிரத்து 368 இலங்கையர்களுக்கு இதுவரை கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: