சொல்வதை செய்வோம்! செய்வதைதான் சொல்வோம்!! – பிரதமர் மஹிந்த தெரிவிப்பு!

Saturday, July 25th, 2020

“நாங்கள் சொல்வதை செய்வோம் செய்வதைதான் சொல்வோம்” இது உங்களுக்கு நன்றாக தெரியும். எமக்கு சிங்களம், தமிழ், முஸ்லிம், மலே, பேகர் என்ற பேதமில்லை என  பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்தள்ள பிரதமர் –

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தேசிய நல்லிணக்க அமைச்சு இருந்தது. ஆனால் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் காணப்படவில்லை. கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களின் பெருமளவில் நிதியை செலவிட்டு நல்லிணக்கம் தொடர்பான நிகழ்ச்சிகளை முன்னெடுத்து இனங்களுக்கிடையில் விரிசல் நிலையை ஏற்படுத்தினார்கள்.

30 வருடகால சிவில் யுத்தம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது கல்வி,மற்றும் தொழில்வாய்ப்புக்கள் ஆகியவை பல இளைஞர், யுவதிகளுக்கு கேள்விக் குறியாக்கப்பட்டது.

ஆனால் நாம் குறுகிய காலத்தில் யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்து அனைத்து இன மக்களின் சுதந்திரம்,பாதுகாப்பை உறுதிப்படுத்தினோம்.

போலியான வாக்குறுதிகளை வழங்கி மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளவில்லை. கடந்த நல்லாட்சியில் இனங்களுக்கிடையில் முறண்பாடுகள் தோற்றம் பெற்று அமைதியற்ற நிலை ஏற்பட்டது. நாங்கள் பிரச்சினைகளை சுமுகமாக வெற்றி கொண்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Related posts: