பிரதமர் அலுவலகம் நிராகரிப்பு!

பிணை முறி சம்பவம் தொடர்பாக சட்டமா அதிபரின் அறிக்கையொன்று பிரதமர் அலுவலத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக மவ்பிம என்ற ஞாயிறு பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி முற்றாக உண்மைக்குப் புறம்பானதாகும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியில் உள்ளடக்கிய விடயங்களில் எந்தவித உண்மையும் இல்லை. பிரதமர் அலுவலக தகவல்களின் அடிப்படையில், இந்த செய்தி வெளியிடப்பட்டிருந்ததாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்தின் ஊடகப் பேச்சாளர் மூலம் இந்த தகவல் பெறப்பட்டதாகவும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரதமர் அலுவலத்தின் ஊடக பேச்சாளர் ஒருவர் இல்லை என்பதால் இந்த விடயம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது
Related posts:
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!
யாழில் கொள்ளையர்கள் அட்டகாசம்!
நகர்ப்புறங்களில் விவசாயம் செய்யக்கூடிய பயன்பாட்டுக் காணிகளை அடையாளம் காணுமாறு துறைசார் அதிகாரிகளுக்க...
|
|