பிரதமரை பதவி நீக்குவது தொடர்பில் சட்டத்தரணிகளிடம் ஆலோசனை!

Friday, February 16th, 2018

தற்போது நிலவும் அரசியல் பதற்றத்திற்கு இடையே பிரதமரை பதவி நீக்குவது தொடர்பில் சட்டமா அதிபரிடம் மற்றும் சட்டத்தரணிகளிடம் ஆலோசனை பெறவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையில் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அசராங்கத்தை அமைக்க கூட்டு எதிர்க்கட்சி ஆதரவு வழங்கினாலும் , அதில் அமைச்சுப் பதவிகளை ஏற்கப்போவது இல்லை என ஜனாதிபதிக்கு அறிவித்ததாக குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்

இதேவேளை , கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்றின் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து மக்களுக்கான எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இன்று உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனை குறிப்பிட்டார்.

இதன்போது , இணைந்துக்கொண்ட முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ , நாட்டின் நிலவும் குழப்பமான நிலையில் இருந்து மீள பொதுத் தேர்தல் ஒன்று தேவை என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: