தெங்கு பாதிப்பு தொடர்பில் தென்னை பயிர்ச்செய்கை சபையினர் கள ஆய்வு!

Thursday, June 15th, 2023

தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தெங்கு பாதிப்பு தொடர்பில் கள ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தெங்கு செய்கையில் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக அப்பகுதிக்கு நேற்றையதினம் குறித்த குழு விஜயம் மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில் பாதிப்புக்குள்ளாகின்றமை தொடர்பில் கூறப்பட்ட தென்னைகளை அவர்கள் பார்வையிட்டதுடன், அதற்கான தீர்வு தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தனர்.

தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாண பிராந்திய முகாமையாளர் தேவராஜா இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் ஒருவகையான நோய் தாக்கம் ஏற்பட்டு வருவதை காணக்கூடியதாக உள்ளதாகவும், அதற்கு முறையான பசளையிட்டு நீர்பாச்சுதல் அவசியமானது என தெரிவித்தார்.

தென்னம்பிள்ளைகளின் பச்சையங்களை வெள்ளை பூச்சிகள் உருஞ்சுவதாகவும், அதனால் இவ்வாறான தாக்கம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். அவற்றை கட்டுப்படுத்த முடியும் எனவும், இதன் தாக்கத்தினால் தெங்கு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த நோய்த் தாக்கம் தொடர்பில் தர்மபுரம் பகுதியில் தெங்கு உற்பத்தியில் ஈடுபடும் மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. குறித்த கலந்துரையாடல் தர்மபுரம் பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: