பிரதமரது விசாரணைகளை அடுத்து பதவி இழக்கிறார் விஜயகலா!

புலிகள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கூறியிருந்த சர்ச்சைக்கரிய கருத்தை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர் பதவி இழக்கின்றார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர்கள் இருவர் முன்னிலையில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக் கூறியிருந்த விஜயகலாவின் உரையினால் தென்னிலங்கையில் பெரும் சர்ச்சை உருவாகியிருந்ததுடன் நாடாளுமன்றிலும் கடும் வாதப் பிரதிவாதங்கள் எழுந்ததை அடுத்து அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்
யாழ்ப்பாணத்திலிருந்த விஜயகலாவை உலங்குவானூர்தி மூலம் கொழும்புக்கு அவசரமாக அழைத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சி மட்டத்தில் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், சட்ட ரீதியான விசாரணைகளுக்கும் அவர் முகங்கொடுக்க வேண்டியுள்ள நிலை ஏற்பட்டுள்ளதாலும் இன்றையதினம் பதவி இழக்கின்றார் என செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|