மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்தாக பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Monday, December 20th, 2021

மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு விரைவில் தீர்வு காண்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக அகில இலங்கை விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றபோதே, பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் எனவும் இரசாயன உரங்களை வழங்கினால் மாத்திரமே மரக்கறி தட்டுப்பாட்டைத் தடுக்க முடியும் எனவும் அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியுள்ளது.

எனினும் சந்தையில் மரக்கறி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், மே மாதத்திற்குள் காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே மரக்கறி உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளில் தலையிட்டு விரைவில் தீர்வு காண்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: