இலங்கைக்கு வரும் வெளிவிவகார அமைச்சர்கள்!

Tuesday, July 18th, 2017

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷொப் (Julie Bishop) இவ்வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஏனைய முக்கிய அமைச்சர்கள் சிலரையும் அவர் சந்திக்க உள்ளார்.

இரு தரப்பு பாதுகாப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் அவர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளார்.டெங்கு காய்ச்சலைத் தடுக்க அவுஸ்திரேலியா வழங்கும் உதவி குறித்தும் ஜனாதிபதியுடன் இணைந்து அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நல்லிணக்க செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்தும் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி வி.பாலகிருஷ்ணன் (Vivian Balakrishnan) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

Related posts:

முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க நடவடிக்கை - வர்த...
கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாக இதனை கருதுகிற...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் இருவர் திடீர் இராஜினாமா!