தொல்லியல் எச்சங்கள் மீட்கப்பட்ட ஆனைக்கோட்டையில் சட்டவிரோத மண் அகழ்வு – தடுத்துநிறுத்தக் கோருகிறது வலி தென்மேற்கு பிரதேசசபை!

Saturday, December 4th, 2021

தொல்லியல் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை கரைப்பிட்டி மயானத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வை தடுத்து நிறுத்தக்கோரியும் அதன் வரலாற்று தொன்மையை பாதுகாத்திட வேண்டுமெனவும் வலியுறுத்தி வலி, தென்மேற்கு – மானிப்பாய் பிரதேசசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது..

ஆனைக்கோட்டை – கரைப்பிட்டி மயானத்தில் அண்மைக்காலமாக சில சமூக விரோதிகளால் இடம்பெற்றுவரும் மண் அகழ்வுகளால் அம்மண்பிட்டிகளில் காணப்படும் பெருங்கற்கால யுகத்திற்குரிய தொல்பொருள் எச்சங்கள் அழிக்கப்படுவதாகவும் இதனை தடுத்து நிறுத்தி அப்பகுதியை ஒரு பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பிரதேசமாக பிரகடனப்படுத்திட வேண்டுமெனவும் சபையில் பிரேரணை முன்வைக்கப்பட்டு இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

1980 ஆம் ஆண்டில் ஆனைக்கோட்டை பகுதியில் கரைப்பிட்டி மயானத்தில் காணப்பட்ட மண்திட்டுக்களிடையே பேராசிரியர் கா.இந்திரபாலா, பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், முனைவர்.பொ.இரகுபதி ஆகியோர் தலைமையில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் குழாமினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது இலங்கையில் மிகமிக பழமையான ஒரு அடக்ககுழியும் பல தொல்பொருள்களும் மீட்கப்பட்டன.

இவ்வாறு தொல்லியல் சிறப்புடைய இப்பகுதியில் தொடரும் மண் அகழ்வுகளால் எங்கள் பண்டைய தொல்பொருள் எச்சங்கள் அழிக்கப்படும் நிலையில் மண் அகழ்வை தடுத்தி நிறுத்தி பாதுகாப்பட்ட பிரதேசமாக மாற்ற வேண்டுமெனவும் வலியுறுத்திப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: