கிராமிய, நகர்ப்புற பாடசாலைகள், வைத்தியசாலைகளுக்கான பிரவேச வீதிகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பணிப்பு!

Monday, January 3rd, 2022

நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள் மற்றும் கிராமிய வைத்தியசாலைகளுக்கான அனைத்து பிரவேச வீதிகளையும் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாடசாலை மற்றும் வைத்தியசாலை வீதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் முதலாவதாக குருநாகல் சேர் ஜோன் கொத்தலாவல பாடசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்படவுள்ள வீதிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய கிராமிய பாடசாலைகளுக்கான பிரவேச வீதிகள் மற்றும் கிராமிய வைத்தியசாலை பிரவேச வீதிகள் பற்றிய விபரங்களை துரிதமாக வழங்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பிரேமசிறிக்கு பணிப்புரை விடுதுள்ளார். இதனை உடனடியாக தன்னிடம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய பிரவேச வீதிகளை அடையாளம் காணுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்குமாறும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலைகளுக்கான பிரவேச வீதிகளை அபிவிருத்தி செய்யுமாறு கோரி பொதுமக்களிடம் இருந்து கடிதங்கள் கிடைத்து வருவதாகவும் முன்னுரிமை அடிப்படையில் அந்த வீதிகளின் அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: