பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு கிடைத்துள்ளது – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, January 4th, 2022

பிரதமருடன் இன்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச மருத்துவ அதிகாரி சங்க இடமாற்ற சபை தொடர்பில் நிலவிய பிரச்சினைகளுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கப் பெற்றுள்ளதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு ஆகியவற்றின் உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நிர்வாக சபை வைத்திய உத்தியோகத்தர் தொடர்பில் ஆராய, பிரதமர் குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக்குழு மற்றும் ஊடகக்குழு ஆகியவற்றின் உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: