பிணைமுறி மோசடி தொடர்பில் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேனவுக்கு விளக்கமறியல்!

பேர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேனஆகியோரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த இருவரின் வீட்டினையும் சுற்றி வளைத்த குற்றப் புலனாய்வு அதிகாரிகள் அவர்களைக் கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த இருவரும் 12 மணித்தியால நீண்ட விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். எதிர்வரும் 16 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் பிரதான சந்தேகநபர்களாக அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரின் பெயரிடப்பட்டுள்ளது.
Related posts:
பிரதமரை நீக்குவதாக சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!
35 அடியை எட்டியது இரணைமடுக் குளம்!
ரியாத் நகரில் நடைபெறும் அபிவிருத்திக்கான வலுத்திறன் தொடர்பான விசேட கூட்டத்தில் இலங்கை சார்பில் வெளிவ...
|
|