பாலின சமத்துவம் – பெண்களுக்கு அதிகாரமளித்தல் சட்டமூலத்தின் முதல் வரைவு நிறைவு!

Saturday, December 17th, 2022

பாலின சமத்துவம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் தொடர்பான சட்டமூலத்தின் முதல் வரைவு நிறைவடைந்துள்ளது.

இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களுக்கு விசேட முக்கியத்துவம் அளித்து பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை நாடாளுமன்ற தெரிவுக்குழு ஆராய்ந்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கையிடும் வகையில் இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கான தேசிய ஆணையத்தை அமைப்பதற்கும், பெண்களின் உரிமைகளுக்காக ஒம்புட்ஸ்மேன் நியமனம், பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அத்தகைய உரிமைகள் மீறப்பட்டால் ஆணையம் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் உட்பட ஒரு பொறிமுறையை நிறுவுவதற்காக இந்த சட்டமூலம் வரைவு செய்யப்பட்டுள்ளது.

பொது மக்கள், பாலின நிபுணர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்புகளின் கருத்துக்களைப் பெறுமாறு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களிலும், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேரவையிலும், பத்திரிகை விளம்பரங்களாகவும் பிரசுரிக்கப்பட்டு, சட்டமூலம் தொடர்பான கருத்துக்களைப் பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: