மின்சாரம் வழங்குவது பிரச்சினையாகியுள்ளது – பிரதி அமைச்சர் அஜித் தெரிவிப்பு!
Tuesday, December 27th, 2016
நுரைச்சோலை மின் நிலையத்திற்கு பின்னர், நாட்டில் முதன்மை மின் உற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்படாமையால் மின்சார விநியோகத்தை தொடர்ந்தும் வழங்குவது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக மின்வலு பிரதியமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த செம்ரேம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை சூரியசக்தி மூலம் 50 மெகாவார்ட் மின்சக்தியை தேசிய கூட்டமைப்புக்கு வழங்க முடிந்துள்ளது. நீர் மின் உற்பத்தி தொடர்ந்தும் நெருக்கடிக்கு உள்ளாகுமாயின் நாட்டுக்கு இருக்கும் ஒரே சிறந்த மாற்றுவழி சூரிய சக்தியில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:
கஞ்சா செடியைப் பூங்கன்று என்று நினைத்தேன் - நாவற்குழியில் கைதானவர் வாக்குமூலம்!
மழையுடன் கூடிய காலநிலை தொடரும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
வீதி விபத்துக்களினால் ஏற்படும் மொத்த பொருளாதார சேதம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 5 வீதமாக உள்ள...
|
|
|


