பார்வையாளர்களை மெய்சிலிர்க் கவைத்த காற்றின் வண்ணம் கலைநிகழ்வு!

Sunday, July 31st, 2016

 “காற்றின் வண்ணம்”; என்ற தொனிப்பொருளின் கீழ் மாற்றுத்திறனாளிகள் பங்கெடுத்துக் கொண்ட கலைநிகழ்வுகள் கொழும்பில் வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளன.

பிளவர் வீதியில் அமைந்துள்ள கொழும்பு மகளிர் கல்லூரியில் நேற்றையதினம் (30.) இக்கலை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் கைதடி மற்றும் இரத்மலானை ஆகிய இடங்களிலுள்ள மாற்றுத்திறனாளிகள் இல்லங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

34442923-d170-4f62-b33f-91669bb2a5fc

நிகழ்வில் தமிழ் சிங்களச மூகங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் தத்தமது கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கேற்ப தமது திறமைகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத் தியிருந்தனர்.

நிகழ்வை கண்டுகளிக்க வருகைதந்திருந்திருந்தோர் கலைநிகழ்வுளை ஆர்வத்துடனும், உணர்வுபூர்வமாகவும் இரசித்திருந்ததுடன் நிகழ்வுகளில் பங்கெடுத்துக் கொண்டோருக்கு தமது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் நெஞ்சாரதெரிவித்துக் கொண்டனர்.

சமூகத்தில் ஓர் அங்கமாகவாழும் மாற்றுத்திறனாளிகளது உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், தமிழ் சிங்களம் என்ற பேதங்களுக்கு அப்பால் இரு இனங்களுக்கிடையே புரிந்துணர்வையும், சகோதரத்துவத்தையும், நல்லுறவையும் வளர்த்தெடுக்கும் நோக்கிலும் இந்நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

978bca97-5974-4954-9d71-e31ad405e0f0

இந்நிகழ்வில் பாடல்கள், நடனங்கள், கராத்தேகண்காட்சி உள்ளிட்டபல் வேறுகலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது போன்ற கலை நிகழ்வுகளை எதிர்காலங்களில் தொடர்ச்சியாக முன்னெடுக்கவேண்டுமென்றும், இதனூடாகவே மாற்றுத்திறனாளிகளது ஆற்றல்களையும், திறமைகளையும் வெளிக்கொணரமுடியும் என்பதுடன் அவர்களும் சமூகத்தின் ஒருஅங்கத்தவர்கள் என்பதுடன் அவர்களதுபெற்றோர், உற்றார், உறவினர்களுக்கும் ஆறுதலாகவும் இருக்குமெனவும் நிகழ்வில் கலந்தகொண்டோர் தெரிவித்திருந்தாக கொழும்பிலுள்ள எமது செய்தியாளர் அறியத்தருகின்றார்.

4c6bd044-2b83-4f44-89b9-074e6c733dc9

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற கொடிய யுத்தம் காரணமாக எமது சமூகத்திலும் மாற்றுத்திறனாளிகளாக பலர் வாழ்ந்துவரும் நிலையில் அவர்களையும் சகமனிதர்களா கமனித நேயத்துடன் நேசிக்கும் அதேவேளை, அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடக்கவேண்டியதுஎம் ஒவ்வொருவரின் தலையாய கடமையும் பொறுப்பமாகும் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டியது அவசியமானதாகும்.

Related posts: