பாரிய வருமான இழப்பை சந்தித்துள்ளது சிறிலங்கா ஏயார்லைன்ஸ் நிறுவனம் – சிறிலங்கா ஏயார்லைன்ஸ்சின் தலைவர் தெரிவிப்பு!

Monday, July 26th, 2021

சிறிலங்கா ஏயார்லைன்ஸ் 2020 மற்றும் 2021 நிதியாண்டுகளில் 70% வருமான இழப்பை சந்தித்துள்ளதாக சிறிலங்கா ஏயார்லைன்ஸ்சின் தலைவர் அசோக்பத்திரகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார் –

குறித்த அறிக்கையில் – உலகளவிய ரீதியில் கோவிட் பரவல் காரணமாக வானூர்தி துறையில் 60முதல் 80 வீதமான இழப்புக்கள் ஏற்பட்டன என்பதை அந்த அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எல்லை கட்டுபாடுகள் மற்றும் வானூர்தி நிலையங்கள் மூடப்பட்டிருந்த போதும் சிறிலங்கா ஏயார்லைன்ஸ் தொடர்ந்தும் வெளிநாடுகளில் நிர்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணிகளில் தொடர்ந்தும் ஈடுப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020 ஏப்ரல் மாதம்முதல் 2021 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 229 வானூர்திகளில் 74 ஆயிரத்து 32 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.

எனினும் 2021 ஏப்ரல்முதல் இதுவரையான காலப்பகுதியில் அட்டவணைப்படுத்தப்பட்ட சிறிலங்கன் ஏர்லைன்ஸ் வானூர்தியில் 35 ஆயிரத்து 612 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும்  அசோக் பத்திரகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: