பெண் தொழிலாளர்களின் அதிகரிப்பு நீண்ட பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும்!

Friday, June 22nd, 2018

இலங்கையில் பெண் தொழிலாளர் பங்களிப்பை அதிகரிப்பதன் மூலம், நீண்டகால பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையின் தொழிலாளர்களில் பாலின ரீதியான வேறுபாடுகள் அதிகமாக நிலைவுகின்றன.

இதனை கட்டுப்படுத்தினால், மொத்த தேசிய உற்பத்தியில் 20 சதவீத அதிகரிப்பை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: