ஓட்டோ சாரதிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவில் வருகிறது மாற்றம் – சுற்றுலாத் துறைக்கும் வருகின்றது.புதிய எரிபொருள் அட்டை – எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு!

Tuesday, August 9th, 2022

தற்போது முழுநேர ஓட்டோ சாரதிகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் அளவில் மாற்றங்களை செய்ய எதிர்பார்த்துள்ளதாக இலங்கைப் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவிக்கையில், –

ஓட்டோ பயன்பாடுகளை முழுநேர, பகுதிநேர, தனிப்பட்டப் பாவனைக்குப் பயன்படுத்துவோர் என மூன்றாகப் பிரிக்க வேண்டும் என அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

மேலும், எரிபொருளுக்கான புதிய தேசிய அனுமதிப்பத்திரத்தின் ஊடாக வெறும் 30 விநாடிகளுக்குள் எரிபொருளை நிரப்பிக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுற்றுலாத்துறைக்கு தேவையான எரிபொருளை வழங்க புதிய எரிபொருள் அட்டையொன்று அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதி Q.R. இன்று காலை நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்த வழிமுறைகள் குறித்து அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

ஒரு தொலைபேசி எண் மூலம் பல வாகனங்களை பதிவு செய்தல் என பல விடயங்கள் குறித்து இக்கலந்துரையாடலில் ஆலோசனைகளாக முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: