புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

Saturday, October 21st, 2017

புதிய அரசியலமைப்பிற்கான சட்டவரைவு தயாரிக்கப்படாத நிலையில், அது குறித்து வெளியாகும் சில தவறான விமர்சனங்கள் தொடர்பில் மக்கள் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளார்

ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற தீபாவளி பண்டிகை நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்

நாட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சந்தர்ப்பத்திற்கேற்றவாறு பொருத்தமான முறையில் தீர்வுகளை பெற்றுக்கொடுக்காமையினாலேயே மூன்று தசாப்த கால கொடிய யுத்தத்திற்கு நாம் முகங்கொடுக்க நேர்ந்தது. நாட்டை நேசிக்கும் உண்மையான மனிதர்கள் என்ற வகையில் சகல இனங்களுக்கிடையிலும் அமைதி, நல்லிணக்கம் என்பவற்றை கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்று திரளவேண்டும்

யுத்தத்தினால் இழக்கப்பட்ட இனங்களுக்கிடையிலான சகவாழ்வு, நட்புறவு உள்ளிட்ட விடயங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது

இந்தநிலையில் சில பிற்போக்குவாதிகளினால் அரச நடவடிக்கைகளில் தடங்கல்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இதேவேளை ‘கிராம சக்தி’ எனப்படும் தேசிய வேலை திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

Related posts:


அரச ஊழியர்கள் பொது மக்களுக்காகவே செயற்படுகின்றனர் - மக்களை நசுக்கி ஒடுக்க வேண்டாம் என அரச அதிகாரிக...
நாட்டில் முழுமையாக சிமெந்து உற்பத்தியை மேற்கொள்வது தொடர்பில் அவதானம் - நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெ...
மின் , வலுசக்தி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அமெரிக்க திறைசேறி துணை உதவி செயலாளருக்கு விளக்கமளிப்பு!