அரச ஊழியர்கள் பொது மக்களுக்காகவே செயற்படுகின்றனர் – மக்களை நசுக்கி ஒடுக்க வேண்டாம் என அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச வலியுறுத்து!

Tuesday, March 23rd, 2021

மக்களுக்கான சேவையின்போது அவர்களை சட்டத்தை காட்டி நசுக்கி ஒடுக்க வேண்டாம் என அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ஆலோசனை வழங்கியுள்ளார்.

கங்கைகளை பாதுகாப்போம் என்ற திட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது  அவர் மேலும் தெரிவிக்கையில் –

அரச ஊழியர்கள் பொது மக்களுக்காகவே செயற்படுகின்றனர். அதனால் மக்களை நசுக்கி ஒடுக்கி சட்டத்தை பாதுகாப்பதில் பயனில்லை. எனவே சட்டத்தை பிரயோசனமாக பயன்படுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“கிராமத்தில் மக்கள் ஒருபோதும் காடுகளை அழிப்பதில்லை. அவர்கள் சுற்றாடலை பாதுகாப்பர். அந்த மக்களை வாழச்செய்ய அபிவிருத்தி அவசியம். அது நிலையான அபிவிருத்தியாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்களுக்கு வழிகாட்டும் வகையில் சட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என்பதை எமது அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும் என்பதுடன்  நாம் அனைவரும் சேவை செய்கிறோம் என்பதை கவனத்தில் எடுத்து செயற்பட வேண்டும்.

நாம் சேவை செய்வது மக்களுக்காக.. வேலை செய்யாமல் இருப்பது இலகு. ஆனால் வேலை செய்வது கடினம். அதற்கு அர்ப்பணிப்பு தேவை” எனவும் இதன்போது  ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: