பாரம்பரியம் முக்கியமானது- யாழ் மாணவர் ஒன்றிய தலைவர்!

Wednesday, July 20th, 2016

யாழ். பல்கலைக்கழகத்திற்கென ஒரு கலாச்சார பகிர்வு உண்டு. அதனை நாம் எந்த வகையிலும் தணிக்கை செய்யவோ, விடுக்கொடுக்கவோ முடியாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் தி.சிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமானது ஒருசில மாணவக்குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு காரணமாகவே ஏற்பட்ட ஒன்றாகும். திட்டமிடப்படாத ஒரு நிகழ்வின் சார்பாகவும் ஏற்பட்ட குழப்பமாகவுமே நாங்கள் இதனை கருதுகின்றோம்.

மேலும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு என தனியான தொரு கலாச்சார பகிர்வு உண்டு அதனை நாம் எந்த வகையிலோ தணிக்கை செய்யவோ, விடுக்கொடுக்கவோ முடியாத ஒரு சூழ்நிலை காணப்படுகின்றது. அத்துடன், பிற இன, மத மாணவர்களுக்கான மதிப்பினை நாங்கள் நிச்சயமாக வழங்குகின்றோம். எமது நிர்வாகமும் அதனை வழங்கி கொண்டு இருக்கின்றது’ என தெரிவித்துள்ளார்.

Related posts: