இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யும் – ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு!

Wednesday, September 30th, 2020

உலகளவில் உள்ள ஊடகங்களின் போக்குகள் மற்றும் தளங்களை உள்ளடக்குவதற்கான திருத்தங்களை செய்வதற்காக இலங்கையின் பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்களுடனான சந்திப்பின்போது பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

மின்னணு, அச்சு மற்றும் சமூக ஊடக தளங்கள் மூலம் தனிநபர்கள், நிறுவனங்கள் அல்லது வணிகங்களுக்கு எதிராக நியாயமற்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ளன என இதன்போது குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில் இலங்கையின் பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டம் இலங்கையில் பத்திரிகைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மட்டுமே தீர்வு காணும் என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டம் ஒட்டுமொத்தமாக மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் மேலும் இது சமூக ஊடகங்கள் மற்றும் பிற புதிய ஊடக தளங்களை உள்ளடக்கியது அல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் பத்திரிகை ஸ்தாபனத்தின் சட்டம் தேவையான நேரத்தில் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: