பாமர மக்களும் வெற்றி பெறவேண்டுமென பாதை வகுத்தவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – யாழ் மாவட்ட தொழிற் சங்கங்கள் கூட்டாக தெரிவிப்பு!

Monday, May 1st, 2023

ஏழை உழைப்பாளர் வர்க்கத்தின் உதிரங்களை உறிஞ்சும் முதலாழித்துவத்தை உடைத்து பாமர மக்களின் வாழ்க்கைக்கு சிறப்பான வழிவகை செய்துகொடுப்பதால் தான் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமது நெஞ்சங்களில் கடவுளாக பார்க்கப்படுகின்றார் என யாழ் மாவட்ட தொழிற் சங்கங்கள் கூட்டாக தெரிவித்துள்ளன.

இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உழைப்பாளர் தின கூட்டத்தில் பல்வேறு தொழிற்துறைகளையும் உள்ளடக்கிய தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் தத்தமது அமைப்புகள் சார்பாக உரையாற்றியிருந்தனர.  இதன்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்திருந்தனர்..

இதன்போது அவகள் மேலும் கூறுகையில் –

சிறுகடை வியாபாரமாக இருந்தாலும் சரி கடற்றொழில் மற்றும் பனை தென்னை சார் தொழிற் துறைகாளானாலும் சரி பல்கலைக்கழகம் மற்றும் கல்வித்துறை, ஆலயங்கள் உள்ளிட்ட ஏனைய தொழிற்துறைகளானாலும் சரி அத்துறையை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் நாளாந்தம் பல்வேறு துன்ப துயரங்களை சுமந்தவர்களாகவே தத்தமது தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான ஒரு சூழலில் அத்துறை சார்ந்த தொழிலாளர்கள் தமக்கான நியாயங்களையும் பிரச்சினைகளுக்கான தீர்வையும் பெற்றுக்கொள்வதற்காக அடைக்கலம் தேடும் கடவுளாக அமைச்சர் இருந்து செயற்பட்டு வருகின்றார்.

நாம் பிரச்சினைகள் என்று அடைக்கலம் தாருங்கள் ஓடிச் சென்றபோதெல்லாம் எம்மை அரவணைத்து நேர காலம் பார்க்காமல் எத்தகைய சவால் வரினும் கூட அவற்றை முறியடித்து நியாயங்களையும் தீர்வுகளையும் பெற்றுத்தந்துள்ளார்.

அத்தகைய ஒரு உழைப்பாளர்களின் காவலரை நாம் என்றும் மறந்தவிடப் போவதில்லை. கடந்த சில காலங்களில் தொழிற்சங்கங்கள் சில தவறானவர்களின் மாயைக்குள் அகப்பட்டு தவறான பாதை வழிமுறைகளை நாடிச் சென்றிருந்தனர்.

ஆனால் அவர்களுக்கெல்லாம் இறுதியில் ஏமாற்றங்களே மிஞிசிக்கிடந்தது.

அதானால் தான் நாம் அதாவது உழைப்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஊழைப்பாளர்களின் நலனுக்காக அன்றுமுதல் இன்றுவரை பாடுபடும் ஈபிடிபிகும் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் முழுமையான ஆதரவையும் அரசியல் ரீதியான பலத்தையும் வழங்க இந்த உழைப்பாளர் தினத்தில் உறுதிபூணுவோம் என்றும் அவரது கரங்களை பலப்படுத்தினால் ஏழை மக்களின் வாழ்வு வசந்தம் பெறும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: