பாதுகாப்பு தலைமையகக் கட்டிடத்தொகுதிக்கு பாதுகாப்பு செயலாளர் விஜயம்!

பத்தரமுல்ல அகுறேகொட பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் பாதுகாப்பு தலைமையகக் கட்டிடத்தொகுதியின் முன்னேற்ற செயற்பாடுகளை பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்தன பார்வையிட்டுள்ளார்.
குறித்த பகுதிக்கு விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக, இராணுவ பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் அமால் கருனாசேகர, கடற்படை பிரதம அதிகாரி ரியர் எட்மிரல் எஸ் எஸ் ரணசிங்க மற்றும் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்
Related posts:
சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் அவசியம்: யாழ். மாவ...
விசேட சூழல் சோதனை நடவடிக்கைகளுக்கு 1500 குழுக்கள்!
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக 720 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீடு !
|
|