1,20,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு!

Monday, July 23rd, 2018

இவ்வாண்டிற்கான சிறுபோக நெற்ச்செய்கை மூலம் கிடைக்கப் பெறும் நெல் விளைச்சலிலிருந்து சுமார் 1,20,000 மெட்ரிக் தொன் நெல்லை விவசாயிகளிடமிருந்து நெற் சந்தைப்படுத்தும் சபை கொள்வனவு செய்யவுள்ளதாக நெற் சந்தைப்படுத்தும் சபை அறிவித்துள்ளது.

தற்போது நாடளாவிய ரீதியில் சிறுபோக நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் தனியார் வியாபாரிகள் கொள்வனவு செய்து வருகின்றனர். இந்நிலைமையைத் தடுக்கும் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்தவும் நெற்சந்தைப்படுத்தவும் சபை திட்டமிட்டுள்ளது.

மாவட்ட அடிப்படையில் நெற் சந்தைப்படுத்தும் சபையின் களஞ்சியசாலைகள் ஊடாக மேற்படி நெல் கொள்வனவை மேற்கொள்வதெனவும் களஞ்சியசாலை இல்லாத பிரதேசங்களில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் முகவர்கள் ஊடாகவும் நெல் கொள்வனவு இடம்பெறும்.

அம்பாறை, பொலனறுவை, மட்டக்களப்பு, அநுராதபுரம் ஆகிய நெல் உற்பத்தி கூடிய மாவட்டங்ளில் நெல் கொள்வனவை மேற்கொள்ள நெல் சந்தைப்படுத்தும் சபை எதிர்பார்க்கின்றது.

இயற்கை உரப்பாவனையை மேற்கொண்டு விளைவிக்கப்படும் நெல் வகைக்கு விசேட விலையை அறிமுகப்படுத்தவும் நெல் சந்தைப்படுத்தும் சபை தீர்மானித்துள்ளதாகவும் அதன் தலைவர் திசா நாயக்க அறிவித்துள்ளார்

Related posts: