வாக்கெண்ணும் நிலையங்கள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது – தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் அறிவிப்பு!

Sunday, July 26th, 2020

ஒகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இரு மடங்காக அதிகரிப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த தேர்தலின் போது வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை 1,420 ஆக இருந்ததாகவும், சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் விரைவாக முடிவுகளை வழங்குவதற்காக இம்முறை அது 2,820 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் பிரதான வாக்கெண்ணும் வளாகங்களின் எண்ணிக்கை 71 என்றும், அந்த வளாகங்களில் உள்ள மொத்த வாக்கெண்ணும் நிலையங்களின் எண்ணிக்கை 2,820 ஆகும். ஒரு எண்ணும் நிலையத்தில் 5000-6000 வாக்குகளைப் பெற ஒரு அமைப்பு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த முறையின் கீழ், 453 தபால்மூல வாக்குகளை எண்ணும் மையங்களும், 2,367 சாதாரண வாக்குகளை எண்ணும் நிலையங்களும் நிறுவப்படும் என்றும் அதோடு எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர், அதற்காக 12 ஆயிரத்து 774 வாக்களிப்பு நிலையங்களும் அமைக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்து.

Related posts: