அதிகரிக்கப்படும் கடன் வசதிகள் வாய்ப்பைப் பெறும் தமிழ் மக்கள்

Sunday, May 21st, 2017

இலங்கையின்  வடக்கு மற்றும் கிழக்கில் வாழும்  தமிழ் மக்களுக்கு வழங்கப் படும்  வங்கிக் கடனை அதிகரிப்பது  தொடர்பில் ஆய்வொன்றை மேற்கொள்ளவுள்ளதாக  அதன் ஆளுநர் இந்திரஜித் குமாரசசுவாமி தெரிவித்துள்ளார்.

வட கிழக்கு மக்களுக்கான  வீட்டுக் கடனை அதிகரிப்பது பற்றியே  நாங்கள் கவனம் செலுத்தவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார் இது தொடர்பில் கொழும்பில் உள்ள வெளிநாட்டு நிருபர்களிடம் கருத்து வெளியிட்ட  மத்திய வங்கி ஆளுநர்

அங்கு வாழும் குடும்பங்கள்  தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பு வதையே போருக்குப் பிந்தைய தமது சவாலாக எதிர்கொள்கின்றன. இது தோட்ர்பில் விரிவான  ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தேவையான நடவடிக்கைகளை  மத்திய வங்கியின் தலைமையகம் முன்னெடுக்கும் எனவும் தெரிவித்தார்.

மே 2009 ல் இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், வெவ்வேறு இடங்களில் பிரிந்து வாழ்ந்த குடும்பங்கள் தங்கள் வாழ்வை ஒன்றாக இணைக்க போராடி வருகின்றன. மூன்று தசாப்தங்களாக பாரிய இழப்புகளை சந்தித்த அந்த சமூகம் தமது  மீள்குடியேற்றதிற் காகவும்  வாழ்வாதாரத்திற்காகவும் சில தொழிள்களில் ஈடுபட்டாலும் அதன் பற்றாக் குறையை நிவர்த்தி செய்ய வங்கிக் கடன்களையே நாடுகின்றனர். எனவும் தெரவித்த  இந்திரஜித் குமாரசசுவாமி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வறுமை அதிகரித்துள்ளது என்பதை மத்திய வங்கியின்  ஒரு சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது  எனவும் தெரிவித்தார்.

வடக்கின்  ஒரு முக்கிய பொருளாதார வளமான விவசாயத்துறையும்  பெரும் வறட்சியால் மோசமாக பாதிக்கப் பட்டுள்ளது,இந்த நிலையில் அந்த மக்களுக்கான கடன் வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதரத்தையும் வளம் படுத்த முடியும் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரவித்தார்

Related posts: