தென்மராட்சியில் மீண்டும் தலைதூக்குகிறது டெங்கு – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

Tuesday, January 22nd, 2019

தென்மராட்சியில் கட்டுப்பாட்டுக்குள் இருந்த டெங்குத் தொற்று அண்மைய மழையின் பின்னர் மீண்டும் தலைதூக்கியுள்ளது.

அதையடுத்து தென்மராட்சிப் பிரதேச சுகாதாரப் பிரிவினர் கடந்த புதன்கிழமை முதல் டெங்கு ஒழிப்புத் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 18 பேர் டெங்குத் தொற்றுக்கு இலக்காகிச் சிகிச்சை பெற்றுள்ளனர். மட்டுவில், சாவகச்சேரி நகரம், எழுதுமட்டுவாழ் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே டெங்குத் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். டெங்குத் தொற்றுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர் வெளியிடங்களில் தங்கிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. டெங்கு தொற்றும் நிலமை காணப்படுவதால் அந்தப் பிரதேசங்களில் சுகாதாரப் பிரிவினர் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

டெங்கு நுளம்பு உருவாகக்கூடிய நீர் ஏந்துபொருள்கள் காணப்படின் அவற்றை அப்புறப்படுத்த வேண்டுமென்றும் சாவகச்சேரி நகரம் தவிர்ந்த ஏனைய பிரிவுகளில் விசாலமான காணிகளாக காணப்படுவதால் உக்கக்கூடிய பொருள்களை காணிக்குள் புதைக்க வேண்டுமென்றும் உக்க முடியாத பாவனைக்கு உதவாத பொலித்தீன் பிளாஸ்ரிக் பழைய பாத்திரங்கள் பிளாஸ்ரிக் குவளைகள் ரயர்கள் போன்றவை காணப்படின் அவற்றை உரைப்பைகளில் இட்டு சாவகச்சேரி பிரதேச சபைக்கு அறிவிப்பின் அவர்கள் அவற்றை வாகனத்தில் ஏற்றிச் செல்வர் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts:


அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் 6 மாதங்கள் சிறை - வர்த்தகர்களை எச்சரிக்கும் நுகர்வோர் விவகார அதிகா...
நாடாளுமன்ற அறிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் பெற நடவடிக்கை - சபாநாயகர்!
மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ...